Latestசினிமா

சிங்கை எம்ஆர்டி நிலையத்தில் நிர்வாண பெண்ணால் பரபரப்பு!

சிங்கப்பூர், ஜூன் 8- சிங்கப்பூர் எம்ஆர்டி நிலையத்தில் ஒரு பெண் நிர்வாண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகி பரபரப்பை ஏற்படுத்தின.

சிங்கப்பூரின் ‘ஸ்டோம்ப்’ இணையதள செய்திபடி இச்சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு சிங்கப்பூர் எம்ஆர்டி நிலையத்தில் நடந்தது. பரவலான அந்த புகைப்படத்தில் அந்த பெண் தனது வலது காலுறை தவிர வேறேதும் அணியவில்லை.

அதோடு, எம்ஆர்டி ஊழியர் ஒருவர் ஒரு துணியைக் கொண்டு அப்பெண்ணை மறைக்க முயற்சிப்பது போலவும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இதனை உறுதிபடுத்திய சிங்கப்பூர் போலீஸ், புதன்கிழமை இரவு 10.30 மணி அளவில் உதவி வழங்குவதற்காக அழைக்கப்பட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட 35 வயது பெண் மன நல சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பு கூறியது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker