Latestமலேசியா

மலேசிய உணவகச் சம்பவம்: நடிகை சப்னாவை ‘சிக்க’ வைத்த அவலம்!

மும்பை, ஜூன் 7- கோலாலம்பூரில் ஒரு வாழை இலை உணவகத்தில், சாலையோரம் தேங்கிய தண்ணீரில் தட்டுக்களை கழுவிய உணவக ஊழியர்களின் செயல், பல நாடுகளில் வைரலாகியது என்றாலும், இதனால் எக்கச் சக்கமான சிக்கலில் சிக்கி கடைசியில் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டார் பிரபல நடிகை சப்னா அஸ்மி.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரபல போலிவுட் நடிகையும்- சமூக சேவகியுமான சபனா அஸ்மி, தனது டுவிட்டரில் ரெயில்வே கேட்டரிங் ஊழியர்கள் அழுக்கு தண்ணீரால் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

“ரயில்வே கேட்டரிங் சேவைகளின் லட்சணத்தைப் பாருங்கள்” என்ற வகையில் இருந்த அந்த வீடியோ இந்தியா முழுவதும் வைரலானது. இதனால் ரயில்வே துறைக்கு கெட்டப் பெயர் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த வீடியோ குறித்து ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், நடிகை சபனா அஸ்மியிடம் விளக்கம் ஒனறை அளித்தார்.

அதில், “நீங்கள் குறிப்பிட்டிருந்து வீடியோ மலேசியாவில் உள்ள ஓர் உணவகத்தில் சாலையில் தேங்கிய நீரில் அதன் ஊழியர்கள் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த காட்சி. அந்த வீடியோவுக்கும் இந்திய ரயில்வே துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட சபனா அஸ்மி, தவறுக்காக வருந்துகிறேன் என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இந்தியாவின் நல்லெண்ண தூதராகவும் இருந்துள்ள சபனா அஸ்மி, இது போன்ற உறுதி செய்யப்படாத, தவறான வீடியோவை பதிவு செய்யலாமா? என்று சமூக ஊடகங்களில் வெளுத்து வாங்கியுள்ளனர்.

 

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker