Latestமலேசியா

ECRL-ஐ ரத்து செய்வதேன்? எதிர்க்கட்சி மாநிலங்களை தண்டிக்கவா? – நஜிப்

கோலாலம்பூர், ஜூன்.8- ECRL கிழக்குக் கடற்கரை இரயில் பாதைத் திட்டத்தை ரத்து செய்ய பக்காத்தான் ஹராப்பான் அரசு துடிப்பது காரணம் என்ன? எதிர்க்கட்சி மாநிலங்களைத் தண்டிக்கும் செயலா இது? என நஜிப் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த ECRL திட்டத்தின் வழி, பக்காத்தான் கீழ் இல்லாத கிளந்தான், திரங்கானு, பகாங் ஆகிய மாநிலங்கள் பெரும் லாபத்தை ஈட்டும். அதனை முறியடிக்கும் சதிநாச வேலையா இதுவென அவர் கேட்டுள்ளார்.

“22 ஆண்டுகால அரசியலில் எதிர்க்கட்சி மாநிலங்களை தண்டிக்கும் மகாதீரின் பழக்கம் இன்னும் மாறவில்லை போலும்” என நஜிப் தனது பேஸ்புக் பக்கத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தனது 9 ஆண்டுகால அரசியலை பக்காத்தான் அழிக்க விரும்புவது பற்றி தனக்கு கவலை இல்லை. ஆனால், மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை எல்லாம் ரத்து செய்யப்படுவதை நினைத்தால் தான் வருத்தமாக இருப்பதாக நஜிப் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker