Latestமலேசியா

அஸ்மின் அலியின் மவுசு கூடுதா?

கோலாலம்பூர், ஜூன்.9- பொருளாதார விவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட பி.கே.ஆர் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலிக்கு கூடுதல் அதிகாரங்களை பிரதமர் துன் மகாதீர் வழங்கி இருக்கிறார். அதன் வழி பக்காத்தான் ஹராப்பானில் அஸ்மினின் பெயர் ஓங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மகாதீருக்கு அடுத்து டத்தோஶ்ரீ அன்வார் வருவதற்கு இது தடையாக இருக்குமோ எனும் கேள்வி அன்வாரின் ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

முன்பு தே.மு ஆட்சியின்போது நிதி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் இருந்த பெட்ரோனாஸ், தேசிய கருவூலம், பெட்லா, தாபோங் ஹஜி போன்றவை, அஸ்மின் அலியின் அமைச்சுக் கீழ் கண்காணிக்கும் அதிகாரத்தை துன் மகாதீர் வழங்கியுள்ளார். ஓர் அரசியல்வாதிக்கு இது போன்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அவரது தகுதி தன்னாலேயே கூடும். அத்தகைய நிலையில் இருக்கும் அஸ்மின் அலியின் மவுசு பக்காத்தான் அரசில் கூடி வருகிறது எனலாம்.

இது, அன்வாரின் ஆதரவாளர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இன்னும் இரண்டு மூன்றாண்டுகளில் துன் மகாதீர் பிரதமர் பதவியை அன்வாரிடம் வழங்குவார் என்பதே அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. மாறாக, அஸ்மின் அலியின் திடீர் மவுசு அன்வாரின் மவுசை குறைத்து விடுமோ என்று அவர்கள் ஐயுறுகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker