Latestஉலகம்

அமெரிக்காவின் பிரபல சமையல் கலைஞர் அந்தோனி போர்டன் தற்கொலை

பிரான்சிஸ்,ஜூன்.9- பிரபல சமையல் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரைப் பிரபலம் என பன்முகங்களைக் கொண்ட அந்தோனி போர்டன் தனது 61 ஆவது வயதில் தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவைச் சேர்ந்த அந்தோனி, உலகம் முழுவதும் 80-க்கும் அதிகமான நாடுகளுக்கு பயணித்து, சிறந்த உணவு மற்றும் பானங்கள் குறித்து நிகழ்ச்சிகளை நடத்தி புகழ்பெற்றவர் ஆவார்.

ஏராளமான விருதுகளையும் வென்ற இவர், சமையல் குறித்து ‘Parts Unknown’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சி, அமெரிக்காவின் CNN தொலைக்காட்சியில் 10 தொடர்களைக் கடந்து 11-வது தொடராக ஒளிபரப்பாகி வருகிறது.

இதற்கான படப்பிடிப்புக்காக பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் நகருக்குச் சென்றிருந்த அந்தோனி தான் தங்கியிருந்த தங்கும்விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது மறைவுக்கு சக சமையல் கலைஞர்கள், ஊழியர்கள் மற்றும் பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker