Latestமலேசியா

தொழில்திறன் பயிற்சியும் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் – குலசேகரன்

ஈப்போ, ஜூன்.9- தொழில்திறன் பயிற்சிகளில் பங்கேற்க  பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களைக் கவரும் முயற்சியில் மனிதவள அமைச்சு களம் இறங்கியுள்ளதாக அமைச்சர் குலசேகரன் தெரிவித்தார்.

அநேக மாணவர்கள் தொழில்திறன் பயிற்சியின் மீது  தவறான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர்.  அதனால், அப்பயிற்சிகளில் பங்கேற்கத் தயங்குகின்றனர்.  ஆனால், தொழில்திறன் பயிற்சியில் இணைந்த பெரும்பாலான மாணவர்கள் பின்னர் நல்ல வேலையில் அமர்ந்துள்ளதை  அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

“மாணவர்கள் தொழில்திறன் பயிற்சியைப் பயனற்ற ஒன்றாக  கருதுவதால் அவர்கள் அப்பயிற்சியில் சேர மறுக்கின்றனர். இப்பயிற்சியை முடித்த பெரும்பாலானவர்களுக்கு வேலை கிடைத்துவிட்டதை அவர்கள் உணரவில்லை,” என பேராக் தொழிலியல் துறைப் பங்குதாரர்களுடனான கூட்டத்திற்கு பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் குலசேகரன் கூறினார்.

அதோடு, ஈப்போ தொழில்திறன் பயிற்சி கல்லூரியில் 900 மாணவர்களுக்கான வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அங்கு வெறும் 491 மாணவர்கள் மட்டுமே பயில்தாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

மேலும், நாடு தழுவிய அளவில் உள்ள 32 தொழில்திறன் பயிற்சி கல்லூரிகளுடன் அதிகமான பள்ளிகள் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.  இது தொடர்பில் தாம் கல்வி அமைச்சுடன் கூடிய விரைவில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்,

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker