Latestஇந்தியா

10 ஆண்டுகளாக சம்பளத்தை உயர்த்தி கொள்ளாத முகேஷ்

மும்பை, ஜூன்.9- இந்தியாவின் மாபெரும் கோடீஸ்வரரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கடந்த 10 ஆண்டுகளாக தனது சம்பளத்தை உயர்த்தி எடுத்துக் கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கடந்த 2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தன்னுடைய
சம்பளத்தை ரூ 15 கோடிக்கு மேல் உயர்த்த வேண்டாம் என முடிவெடுத்தார்.

அதன்படி தனது ஆண்டு சம்பளமாக கடந்த 2008-2009 நிதி ஆண்டு முதல் ஆண்டுக்கு ரூ.15 கோடி மட்டுமே சம்பளமாக எடுத்துக்
கொள்கிறார். நிறுவனத்தின் இயக்குநர் குழு இவரின் சம்பளத்தை ரூ, 38.75 கோடியாக உயர்த்த அனுமதி வழங்கியது. ஆனாலும்
தன்னுடைய சம்பளத்தை உயர்த்த அவர் விரும்பவில்லை.

அதே சமயத்தில் இயக்குநர் குழு உறுப்பினர்களின் சம்பளம் அதிகரித்து கொண்டே போனது. முகேஷ் அம்பானியின் உறவினர் நிகில் ஆர் மெஸ்வானி மற்றும் ஹீதல் ஆர். மெஸ்வானி ஆகியோர் கடந்த நிதி ஆண்டு சம்பளமாக தலா ரூ.16.58 கோடி வாங்கினர்.

இந்நிலையில் இந்நிதியாண்டில் அவரது சம்பளத்தை உயர்த்திட நிறுவனத்தின் குழு அறிவித்தது. இதனை ஏற்காத முகேஷ் அம்பானி ஏற்கனவே எடுத்த முடிவின் படி இந்தாண்டும் அதே ரூ.15 கோடி சம்பளம் பெற்றுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker