Latestமலேசியா

‘MACAU SCAM’ அழைப்பால் ரிம.27 மில்லியன் இழப்பு

ஜோர்ஜ் டவுன், ஜூன்.9- கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பினாங்கில் பதிவு செய்யப்பட்ட ‘MACAU SCAM’ எனப்படும் போலி தொலைபேசி அழைப்பால் நிகழ்ந்த 520 ஏமாற்று சம்பவங்களில் 27 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாக அம்மாநில போலீஸ் தலைவர் டத்தோ தெய்வீகன் தெரிவித்தார்.

“இது தொடர்பாக போலீஸ் பல முறை தெளிவுப்படுத்தி இருந்தாலும் பல்வேறு பின்னணியைச் சார்ந்த பொதுமக்கள் மட்டுமல்லாது நிபுணர்களும்கூட இன்னமும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பணத்தைப் பெற ஏமாற்று கும்பல் பல்வேறு முறைகளை கையாண்டுள்ளனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது,” என செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

இப்படி ஏமாற்றும் நோக்கத்தில் அழைப்போர், வங்கி அதிகாரிகள், போலீஸ், நீதிமன்ற அதிகாரிகள், கடன் சேகரிப்பு நிறுவனத்தின் பிரதிநிதிகள் போன்று அழைத்து பேசுவர். பாதிக்கப்பட்டவர்களின் கைப்பேசி திரையில் தோன்றும் தொலைபேசி எண்கள் வழக்கமாக சம்பந்தபட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான எண்களாக இருக்கும்.

இணைய நெறிமுறை குரல் எனப்படும் Voice Over Internet Protocol (VOIP) மூலம் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொள்வதால் மக்களில் பெரும்பாலோர் அதை உண்மையென நம்பி விடுகின்றனர்.

எனவே, பொதுமக்கள் இது போன்ற போலி அழைப்பை எளிதில் நம்பி விடாமலும் குறிப்பாக அவர்களது அடையாள அட்டை எண் அல்லது வங்கி கணக்கு எண் போன்ற தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் எனவும் தெய்வீகன் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker