Latestமலேசியா

அரசு ஊழியர்களுக்கு ஆங்கிலத் தேர்வு; திறனை வளர்க்க முதல்படி! -அமைச்சர்

சிம்பாங் ரெங்கம், ஜூன்.10- ஆங்கிலப் புலமை தொடர்பான தேர்வுச் சோதனைகளை, அரசாங்க ஊழியர்கள் ஒரு தடையாக பார்க்கக்கூடாது. தங்களுக்கான சவாலாகவும் தங்களின் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான வழியாகவும் பார்க்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் கேட்டுக்கொண்டார்.

அரசாங்க ஊழியர்களிடையே சுயமரியாதையை விதைப்பதற்கான முதல் படி இது. வெளிநாட்டவர்களுடன் சிறந்த முறையில் தொடர்பாடலை மேற்கொள்ள இது உதவும் என்றார் அவர்.

இந்த உலகத்திடமிருந்து மலேசியா ஒரு சரியான கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ள நிலையில், வெளியே உள்ளவர்கள் இப்போது மலேசியா மீது பார்வையைச் செலுத்தத் தொடங்கி விட்டனர். இந்நிலையில், நமது அரசாங்க ஊழியர்கள், ஆங்கிலத் திறனை நல்ல முறையில் கொண்டிருக்காவிட்டால், நமது தோற்றம் பாதிக்கப்பட்டு விடும் என்று அமைச்சர் மஸ்லி மாலிக் சொன்னார்.

அனைத்துலக பிரதிநிதிகளுடன், வெளிநாடுகளில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்க வேண்டிய தேவைகள் இருப்பதால், மூத்த அரசாங்க அதிகாரிகளுக்கு ஆங்கிலப் புலமைக்கான தேர்வுச் சோதனைகள் நடத்தப்படும் என்று கடந்த புதன்கிழமையன்று பிரதமர் துன் மகாதீர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker