Latestமலேசியா

கெடாவில் திடீர்த் தேர்தலா? எங்களுக்கே வெற்றி! – பாஸ்

கோத்தா பாரு, ஜூன்.10- கெடா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால், அத்தேர்தலில் பாஸ் நிச்சயம் கெடாவைக் கைப்பற்றும் என அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோ துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்தார்.

மாநில சட்டமன்ற சபாநாயகர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலின் காரணமாகவே இங்கு மீண்டும் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.

எனினும், தேர்தலுக்கு அதிக செலவாகும் என்பதால், ஒருமைப்பாட்டு அரசாங்கமாக செயல்படலாம் என பாஸ் பரிந்துரைத்திருந்தது. ஆனால், அதனை பக்காத்தான் தலைமைத்துவத்தின் கீழான மாநில அரசு ஏற்கவில்லை.

“இதற்கு மாற்றுவழியே இல்லை; தேர்தல்தான் ஒரே வழி என்றாலும் எங்களுக்கு பிரச்சனையில்லை. எதையும் எதிர்கொள்ள நாங்கள் தயார்” என துவான் இப்ராஹிம் கூறினார்.

நடந்து முடிந்த தேர்தலில் கெடாவைக் கைப்பற்றிய பக்காத்தான் இன்னும் சட்டமன்ற சபாநாயகரை நியமிக்கவில்லை. ஏனெனில், அருதி பெரும்பான்மையில்தான் பக்காத்தான் கெடாவை பிடித்தது.

பக்காத்தான் 18 சட்டமன்றத் தொகுதிகளை வென்றது. மாறாக, பாஸ் 15 சட்டமன்றத் தொகுதிகளையும் தே.மு 3 சட்டமன்றத் தொகுதிகளையும் வென்றன. இது, பக்காத்தானுக்கும் எதிர்க்கட்சியும் சமமான தொகுதிகளை வென்றுள்ள சூழல் ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker