Latestமலேசியா

சொத்துக் கணக்கைச் சொல்லி விட்டார் மாட் சாபு!

கோலாலம்பூர், ஜூன்.10- தங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதை முறையாக மூன்று அமைச்சர்கள் அறிவித்திருப்பதோடு, எங்களின் பதவிகளைப் பயன்படுத்தி எங்களுக்காகவோ, மனைவி, பிள்ளைகளுக்காகவோ சொத்துச் சேர்க்க மாட்டோம் என்று வாக்குறுதி அளித்துள்ளனர்.

தற்காப்பு அமைச்சர் மாட் சாபு, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறை அமைச்சர் சலாவுடின் அயூப் மற்றும் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் ஆகிய மூவரே தங்களின் சொத்துக்களை அறிவித்திருக்கும் அமைச்சர்கள் ஆவர்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் வரையில் தம்முடைய சொத்தின் மதிப்பு சேமிப்பு உள்பட 6 லட்சத்து 88 ஆயிரம் ரிங்கிட் என மாட் சாபு அறிவித்து இருக்கின்றார்.

அதேவேளையில், சலாவுடின் அயூப்பின் சொத்து மதிப்பு 7 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் ஆகும். கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக்கின் சொத்து மதிப்பு 19 லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் தங்களில் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது உள்ளிட்ட தகவல்களையும் வெளியிட்டுள்ளனர். அமைச்சர்கள் என்ற முறையில் அதிகாரத் துஷ்பிரயோகம் வழி நாங்கள் சொத்துக்கள் சேர்க்க மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker