Latestஉலகம்

வழுக்கைத் தலையர்களே, பெண்களை கவர்கிறார்கள்! -ஆய்வுத் தகவல்

நியூயார்க், ஜூன்.11- ஆண்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சினைகளுள் முடி உதிர்வும் ஒன்றாகும். தலைமுடி உதிர்கின்ற நாளிலிருந்தே ஆண்களின் தன்னம்பிக்கை தாழ்வு மட்டத்தில் செல்வதாக உளவியல் ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் அவர்கள் தங்களையும் அறியாமல் பெண்களைக் கவர்ந்து விடுகின்றனர் என்கின்றன அண்மைய ஆய்வுகள்.

ஆனால், தலைமுடி உதிர்ந்து வழுக்கை விழுவது ஒரு சாதாரண உடலியல் மாற்றங்கள் தான் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் திரும்பத் திரும்ப கூறுகின்றனர்.

இந்நிலையில் முடி உதிர்ந்த அல்லது மொட்டை அடித்துக் கொண்ட ஆண்களைத்தான் பெண்கள் அதிகமாக விரும்புகின்றனர் என ஆய்வுகள் மூலம் கண்டறியப் பட்டுள்ளது.

இதற்கு பெண்களே முன் வந்து தமது விருப்பத்திற்கான காரணங்களை முன் வைத்திருக்கிறார்கள். அவற்றைப் பார்ப்பதற்கு முன்னர் முடி உதிர்வு தொடர்பாக அமெரிக்க முடி பராமரிப்பு அமைப்பு ஒன்று முன் வைத்துள்ள ஆய்வுக் கருத்தினை பார்ப்போம்..

அதாவது தற்போதைய தலைமுறையினருக்கு 35- 50 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்களுக்கு முடி உதிர்வது 85% வரை வழுக்கை ஆட்கொண்டு விடுகிறது.

இதற்கு காரணமாக தற்போதைய மாறி வரும் சூழ்நிலைக்கேற்ப வாழ்வியல் பண்புகள் மற்றும் மன அழுத்தங்கள் போன்றவை முன்வைக்கப் படுகின்றன.
இச்சூழலில் வழுக்கையான ஆண்களே, பெண்களை மிகவும் கவர்ந்து விடுகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஒரு பெண் தான் விரும்பிய ஆணைப் பார்க்கும் போது முதலாவதாக அவனது தலைமுடியில் தான் கண் பதியும். அதன் பின்னரே கண்களை நோக்குவாள். தலைமுடியை பார்ப்பதற்கு செலவிட்ட நேரமானது விழிகளைப் பார்ப்பதற்கு கிடைப்பதில்லை. இதனால் அரைகுறையாக தனது கண்ணோட்டத்தை முடித்துக் கொள்கிறாள்.

ஆனால் தலையில் முடியில்லாமல் வழுக்கையாக இருக்கும் ஆணைப் பார்க்கும் போது நேரடியாக வழுக்கை தலையை விட்டு சட்டென்று விழிகளுக்கு வந்து விடுகிறாள். அதனால் அந்த ஆணை அவளுக்கு நன்றாக பிடித்துப் போய் விடுகிறது. இதையெல்லாம் விட வழுக்கையான ஆண்கள், திடகாத்திரமான -வீரியமான ஆண்மகனாக பெண்கள் பார்க்கின்றனர் என்கிறன ஆய்வுகள்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker