Latestசினிமா

முதல் ஜேம்ஸ்பாண்ட் நாயகி யுனிஸ் கெய்ஷன் மரணம்

லண்டன், ஜூன்.11- ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தின் முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த யுனிஸ் கெய்ஷன் காலமானார். ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் பெரும் ரசிகர்கள் கூட்டம் உண்டு. அதேபோல் அந்தத் திரைப்படத்தின் கதாநாயகிகளுக்கும் பெரும் வரவேற்பு உண்டு.

அந்த வகையில் நடிகர் சீன் கானரி நடித்து 1962 ஆம் ஆண்டு வெளியான முதல் ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான “டாக்டர் நோ”வில் கதாநாயகியாக நடித்த யுனிஸ் கெய்ஷன் காலமானார். இவருக்கு 90 வயது.

முதல் பாகம் மட்டுமின்றி அடுத்த பாகமான “ரஷ்யா வித் லவ்” எனும் . ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்திலும் இவரே கதாநாயகியாக நடித்தார். இவரது கதாபாத்திரம் மற்றும் இளமை அழகு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தில் “பாண்ட்… ஜேம்ஸ்பாண்ட்” என்று அழைப்பதும் இவராலேயே பிரபலம் ஆனது. யுனிஸ் கெய்ஷன் சிறிது காலமாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker