Latestஉலகம்

அணுவாயுத ஒழிப்பு ஒப்பந்தம்: டிரம்ப்-கிம் வரலாறு படைத்தனர்!

சிங்கப்பூர், ஜூன்.12- கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதம் ஒழிக்க டிரம்ப் – கிம் இடைவே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முற்றிலுமாக அகற்ற இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் முதன் முறையாக இவ்விரு தலைவர்கள் இடையே இன்று நடைபெற்ற உ.ச்சநிலை மாநாட்டின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது பற்றி டிரம்ப் நிருபர்களிடம் கூறுகையில், முக்கிய ஆவணத்தில் நாங்கள் கையெழுத்து போட்டுள்ளோம். அது விரிவான ஆவணமும் கூட. நாங்கள் இன்னும் பல முறை சந்திக்க உள்ளோம். கிம் ரொம்பவே திறமையானவர் என்பதையும் தமது நாட்டின் மீது மிகுந்த அன்பு கொண்டவர் என்பதையும் அவருடனான சந்திப்பின் போது அறிந்து கொண்டேன்’ என்றார்.

வெள்ளை மாளிகைக்கு “கிம்மை அழைப்பீர்களா” என்ற நிருபரின் கேள்விக்கு, “கண்டிப்பாக அழைப்பேன்” என்றார் கிம் ஜோங் யுன் கூறுகையில், இது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு. கடந்த காலத்தை மறக்க முடிவு செய்துள்ளோம். உலகம் புதிய மாற்றங்களை பார்க்கவுள்ளது என்றார்.

முன்னதாக சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்திருந்த சிறப்புமிக்க மதிய உணவை இருவரும் இணைந்து உட்கொண்டனர். கையெழுத்திட்ட அந்த ஆவணம் என்ன என்பது குறித்து வெளிப்படையாக சொல்லப்படவில்லை.

அதிபர் டிரம்ப்- கிம் ஜோங் யுன் இருவரும் விரிவான ஆழமான மற்றும் உண்மையான வகையில் அமெரிக்கா வடகொரியா நடுவேயான உறவு தொடர்பான சிக்கல்களை பேசினர்.

மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப, இரு நாடுகள் இடையே புதிய உறவை உருவாகும். கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் இணைந்து செயல்படும். கொரிய தீபகற்பத்தில் முற்றாக அணு ஆயுதத்தை ஒழிக்க வடகொரிய பணிகளை மேற்கொள்ளும்.

வியட்நாம் போரின் போது காணாமல் போன மற்றும் சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்களை கண்டறியும் முயற்சியில் அமெரிக்கா – வடகொரியா இணைந்து ஈடுபடும்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker