Latestசினிமா

அனுஷ்காவுக்கு  திருமண ஏற்பாடுகள் தீவிரம்

ஐதராபாத், ஜூன் 12.  நடிகை அனுஷ்காவுக்கு இரகசியமாக திருமண ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  37 வயதாகும் அனுஷ்காவிற்கு, பெற்றோர்கள் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வந்தனர்.

தற்போது மாப்பிள்ளை முடிவாகி விட்டதாகவும் அவருடன் அனுஷ்காவுக்கு ரகசியமாக திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது என்றும் தெலுங்கு படவுலகில் தகவல் பரவி வருகிறது.

2005 ஆம் ஆண்டு சினிமாவுக்குள் பிரவேசித்து தமிழ், தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்துள்ளார் நடிகை அனுஷ்கா.  கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் வந்தும் திறமையை நிரூபித்துள்ளார்.

கடைசியாக அவர் நடித்த பாகமதி படம் வந்தது. அதனையடுத்து இப்போது அவருக்கு படவாய்ப்புகள் குறைந்து விட்டன.

இந்நிலையில் அனுஷ்காவும் தெலுங்கு நடிகர் பிரபாசும் காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக பேச்சு கிசுகிசுக்கப்பட்டது. இரு தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். அதனை இருவரும் மறுத்து விட்டார்கள்.

திருமணத்திற்கு பின் படங்களில் அனுஷ்கா நடிப்பாரா என்று தெரியவில்லை. உடல் எடை கூடி விட்டதால் இளம் நடிகர்கள் அவருடன் ஜோடி சேர மறுக்கின்றனர். மூத்த நடிகர்களும் ஒதுக்குகிறார்கள். எனவே தான் திருமணம் செய்து குடும்பம் நடத்தும் முடிவுக்கு அனுஷ்காவும் வந்துள்ளார் என்றும் கூறுகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker