Latestஇந்தியா

உடல் உறுப்பு தானம்: நடிகர்- நடிகைகள் ஆர்வம்!

மும்பை. ஜூன் 12- இந்தி நடிகர் நடிகைகளான சல்மான்கான். அமீர்கான், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, ராணி முகர்ஜி உள்ளிட்ட பலர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர்.

இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு உடல் உறுப்பு தானமாக பெற முடியாமல் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்து போவதாக ஆய்வொன்று கூறுகிறது.

தற்போது உடல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்பட்டு அதிகம் பேர் தானம் செய்ய முன் வருகிறார்கள். சாதாரண மக்கள் சினிமா பிரபலங்களை பார்த்து முன்னுதாரணம் கொள்வர்.

அந்த வகையில் நடிகர் – நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களும் உறுப்பு தானம் செய்துள்ளனர். இந்தப் பட்டியலில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தன் கண்களை தானமாக எழுதி வைத்திருக்கிறார். அமிதாப் பச்சனும் கண்தானம் செய்துள்ளார். ஜெயபச்சன் உடல் உறுப்பு அனைத்தையும் எழுதி வைத்துள்ளார்.

உடல் உறுப்புகள் அனைத்தையும் பிரியங்கா சோப்ரா தானம் தர எழுதி வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறியப் போது, ‘தனது தாத்தா அசோக் சோப்ரா உறுப்பு தானம் பெறமுடியாமல் இறந்தபோது மிகவும் வருந்தினேன். அந்த வேதனை பிறருக்கும் வரக்கூடாது என்பதால் தானம் செய்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

நடிகர் அமீர்கான் உடன் உறுப்பு அனைத்தையும் தானம் செய்துள்ளார், “சிப் ஆப் தீசிஸ்” என்ற படத்தை பார்த்த பின் உறுப்பு தானம் செய்யும் எண்ணம் வந்தது என்று அமீர்கான் கூறியுள்ளார்.

சல்மான்கான் தனது எலும்புக்குள் இருக்கும் மஜ்ஜையை தானம் செய்துள்ளார். நோயாளிகளுக்கும் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கும் எலும்பு மஜ்ஜை மிகவும் பயன் அளிக்க கூடியது என்றும் இதை தானம் செய்த முதல் இந்தியர் தான் என்று சல்மான்கான் கூறியுள்ளார்.

ராணி முகர்ஜி கண்தானம் செய்துள்ளார். மண்ணுக்குள் அழியப் போகும் கண்களை மற்றவர்களுக்கு வாழ்வில் ஒளியை கூட்டட்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker