Latestஇந்தியா

உயிருக்கு போராடிய நடிகை!- உதவிக்கு வராத மக்கள்!

எர்ணாகுளம், ஜூன்.12- மலையாள நடிகை மேகா மேத்யூ கார் விபத்தில் படுகாயமடைந்து கவிழ்ந்த காருக்குள் ஒரு மணி நேரமாக உயிருக்கு போராடிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் கொச்சியில் இருந்து நேற்று முன்தினம் தனது அண்ணன் திருமண நிச்சயதார்த்தம் நிகழ்வுக்கு காரில் கோட்டயம் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது மழை பெய்து கொண்டிருந்து.

எர்ணாகுளம் அருகே முளன் துருத்தி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த காருடன் விபத்து ஏற்பட்டது. இதில் மேகாவின் கார் தலைகீழாகக் கவிழ்ந்தது. விபத்து அதிர்ச்சியில் காயமடைந்த மேகா காருக்குள் மயங்கி விட்டார்.

மோதிய கார் நிற்காமல் சென்று விட்டது, காருக்குள் சிக்கியவர் இறந்திருக்கலாம் என்று கருதி யாரும் உதவிக்கு வரவில்லை. காருக்குள் சிக்கிக் கொண்ட மேகா மேத்யூ சுமார் ஒரு மணி நேரம் உயிருக்கு போராடியுள்ளார்.

அப்போது அங்கு வந்த புகைப்படக்காரர் ஒருவர் அந்தப் பகுதியினருடன் சேர்ந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.. காயமடைந்த மேகாவுக்கு கொச்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker