Latestமலேசியா

ஓப்ஸ் செலாமாட்: நான்கே நாளில் 5,000 சம்மன்கள்

கோலாலம்பூர், ஜூன்.12 – நோன்பு பெருநாளை முன்னிட்டு அரச மலேசிய போலீஸ் படை 13ஆவது ‘ஓப்ஸ் செலாமாட்’ நடவடிக்கையை தொடங்கிய நான்கு நாள்களில் 5,000க்கும் மேற்பட்ட சம்மன் வெளியாக்கப்பட்டன.

இந்த ‘ஓப்ஸ் செலாமாட்’ நடவடிக்கை தொடங்கப்பட்ட ஜூன் 8ஆம் தேதி முதல் வெளியாக்கப்பட்ட சம்மன்கள் பல்வேறு போக்குவரத்து குற்றங்களை உள்ளடக்கியது என புலனாய்வு மற்றும் போக்குவரத்து அமலாக்கப் பிரிவு தலைவர் உதவி ஆணையாளர் சுல்கிப்லி யாஹ்யா கூறினார்.

எதிர்வரும் பெருநாள் காலத்தில் தலைநகரில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக விபத்துகள் நிகழும் மற்றும் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை கொண்ட 10 முக்கிய சாலைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.

“இந்த பெருநாள் காலங்களில் வாகனமோட்டிகள் பயணத்தை மேற்கொள்ளும் முன் தங்கள் வாகனங்களை நல்ல நிலையில் உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். அதோடு, நீண்ட பயணத்திற்கு முன்பாக அவர்களால் வாகனத்தை செலுத்த இயலுமா என அவர்களின் திறனை மதிப்பீடு செய்ய வேண்டும்,” என்று சுல்கிப்லி தெரிவித்தார்.

மேலும், இன்று காலை நடத்தப்பட்ட சோதனையில் கிட்டதட்ட 50 பேருந்துகளும் ஓட்டுனர்களும் சோதனையிடப்பட்டதில், மொத்தம் 37 சம்மன்கள் வழங்கப்பட்டன.

அதோடு, பேரங்காடிகள், பொதுப் போக்குவரத்து முனையங்கள், மற்றும் தலைநகரிலிருந்து வெளியாகும் முக்கிய சாலைகளில் போலீசார் சோதனைகளும் சாலை தடுப்புகளும் மேற்கொள்வர் என அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker