Latestமலேசியா

ஜிஎஸ்டியால் பறிபோன வேலை: குலசேகரனிடம் கோகிலா மனு!

கோலாலம்பூர், ஜூன்.12- கடந்த 2016-ஆம் ஆண்டு, ஜி.எஸ்.டி அகற்றப் பட வேண்டும் என்ற பேரணியில் கலந்து கொண்டதற்காக பணி நீக்கம் செய்யப் பட்ட முன்னாள் பேங்க் நெகாரா ஊழியரான கோகிலா, தனது வேலை திருப்பித் தரப் பட வேண்டும் என்று மனிதவள அமைச்சிடம் மகஜர் சமர்ப்பித்துள்ளார்.

புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம், மக்களின் உரிமைகளை அவர்களிடமிருந்து பறித்துக் கொள்ளாமல் நல்லாட்சி நடத்தும் என்ற நம்பிக்கையில், தாம் மனிதவள அமைச்சு மற்றும் பிரதமர் துறை அமைச்சின் உதவியை நாடியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

நாட்டு குடிமகள் என்ற அடிப்படையில், தாம் அந்தப் பேரணியில் கலந்து கொண்டதாகவும், தமது உரிமையை நிலை நாட்டியதற்காக தன்னிடமிருந்து தமது வேலை பறிக்கப் பட்டதாக அவர் சொன்னார்.

தமது வேலை தன்னிடம் திருப்பித் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ள கோகிலா, பி.எஸ்.எம் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.சிவராஜனின் உதவியுடன், மனிதவள அமைச்சர் எம்.குலசேகரனையும் நேரில் சந்தித்தார்.

“இந்த விவகாரம் குறித்து தகவலை ஆராய்ந்த பின்னரே, தகுந்த நடவடிக்கையை தம்மால் எடுக்க முடியும் என்று குலசேகரன் என்னிடம் தெரிவித்தார்” என்று கோகிலா கூறினார்.

12 ஆண்டுகளாக பாங்க் நெகாராவில் கோகிலா பணி புரிந்து வந்தார். பாங்க் நெகாராவின் அருங்காட்சியம் மற்றும் கலைக்கூட இலாகாவின் நிர்வாகியாகவும் அவர் பணி புரிந்துள்ளார்.

நியாயமற்ற நிலையில் தமது வேலை பறிக்கப் பட்டதற்காக, தமக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் கோகிலா கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker