Latestமலேசியா

ஜூன்-21இல் பத்துமலையில் மாபெரும் யோகா விழா! பங்கேற்பு அழைப்பு -(VIDEO)

கோலாலம்பூர், ஜூன். 12– அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு, ஜுன் 21ஆம் தேதி பத்துலை திருத்தல வளாகத்தில் மாபெரும் யோகா விழா நடைபெற இருக்கிறது. உலக சாதனை முயற்சியாக இடம் பெறவிருக்கும் இந்த யோகா நிகழ்ச்சியில், சுமார் 2,500-க்கும் அதிகமான ஆர்வலர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக் கழகமும், மலேசிய இந்தியத் தூதரகமும் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பதாக பல்கலைக்கழக யோகா பேராசிரியர் டாக்டர் சி.வி.ஜெயந்தி தெரிவித்தார்.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக யோகா பயிற்சிகளை நடத்திவரும் டாக்டர் ஜெயந்தி கூறுகையில், யோகா கலையின் பயனை சங்கமே உணர்ந்திருக்கிறது. அந்த வகையிலேயே உலக யோகா தினம் பெறுகிறது என்று சுட்டிக்காட்டினார்.

மலேசியாவுக்கான இந்தியத் தூதர் மிர்துல் குமார் இந்நிகழ்வுக்கு முன்னிலை வகிப்பார். ஜூன் 21 ஆம் தேதி காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை நடைபெறும் இந்த யோகா உலகச் சாதனை முயற்சியில் பங்கேற்பவர்களுக்கு அதற்கான சான்றிதழும் அளிக்கப்படும் என்று டாக்டர் ஜெயந்தி தெரிவித்தார்.

பத்துமலையில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அவர் வேண்டுகோள் விடுத்தார். மேல் விபரங்களுக்கு 017-6474594, மற்றும் 019-6618567 ஆகிய கைப்பேசி எண்களுடன் தொடர்பு கொள்ளலாம். www.yogadaymalaysia.com எனும் அகப்பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker