Latestஇந்தியா

டிரம்ப் சார்.. , நீங்க குட்டையா, நெட்டையா?

கென்பெர்ரா, ஜூன்.12- அண்மையில் ஜி-7 மாநாட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டதால் அமெரிக்கா அதிபர் டொனால்ட்  டிரம்ப்  உயரம் தொடர்பான பொய் அம்பலமானது.

அந்தப் புகைப்படத்தில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் அருகில் நிற்கும் 6 அடி-2 அங்குலமுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டிரம்பை விட உயரமாக காட்சியளிக்கிறார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் தேதி வெளியிடப்பட்ட அமெரிக்க அதிபரின் மருத்துவ அறிக்கையில் அவரது உயரம் 6 அடி 3 அங்குலம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள புகைப்படத்தால் வெள்ளை மாளிகை பொய் சொல்லியுள்ளதா? என கேள்வி எழுந்துள்ளது.
அது மட்டுமின்றி டிரம்பின் தற்போதைய எடையின் படி (236 பவுண்டுகள்) 6 அடி 3 அங்குலத்திற்கு உள்ள அவரின் BMI – 29.9 ஆகும்.

இந்த BMI-30 ஆக இருந்தால் டிரம்ப் குண்டானவர்கள் பட்டியலில் இடம் பெற வேண்டும். அதை தவிர்ப்பதற்காவே அவரது மருத்துவ அறிக்கை பொய்யான தகவல்களுடன் தயாரிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

2016 தேர்தலுக்கு முன் டிரம்பின் நீண்ட நாள் மருத்துவரான டாக்டர் ஹேரோல்ட் போன்ஸ்டேன் ஒரு மருத்துவ அறிக்கையை வெளியிட்டு அதன்படி டிரம்ப் சிறப்பான உடல் நலத்துடன் இருப்பதாக கூறியிருந்தார்.

டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இதுவரை அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டவர்களிலேயே ஆரோக்கியத்தில் சிறந்தவர் இவரே. ஆகவே அவரை ஏகமனதாக தேர்ந்தெடுக்கலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் பிரசார அறிக்கை விட்டார்.

ஆனால் பின்னர், அந்த கடிதத்தை டிரம்ப் சொல்லச் சொல்ல தான்   பூர்த்தி செய்ததாகக் கூறி பின் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
தற்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட புகைப்படம் பழைய உண்மைகளை கிளறியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker