Latestமலேசியா

புதிய தேசிய காரா? தேவையே இல்லை – நஜிப்

கோலாலம்பூர், ஜூன்.12- “நாட்டின் கடனை காரணம் காட்டி பொது போக்குவரத்து திட்டங்களை எல்லாம் ரத்து செய்து விட்டார்கள். ஆனால், புதிய தேசிய காரை தயாரிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.  இந்த புதிய தேசிய  கார் தயாரிப்பு திட்டத்தால் கார்  விலை உயரும். இப்படி மக்களின் சுமையை அதிகரிக்கும் திட்டம் தேவைதானா?” என்று முன்னாள் பிரதமர் கேள்வி எழுப்பி உள்ளார்.

“(HSR) கோலாலம்பூர்-சிங்கப்பூர் விரைவு ரயில் திட்டம்,  MRT3 ரயில் திட்டம் போன்ற பொது போக்குவரத்து திட்டங்களை பக்காத்தான் அரசு தொடர வேண்டும். அந்த திட்டங்களை நான் அறிமுகப்படுத்திய ஒரே காரணத்திற்காக அவற்றை ஓரம் கட்டிவிட வேண்டாம்” எனவும் நஜிப் பக்காத்தான் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தான் பிரதமராக இருந்தபோது மக்கள் பயன்பெறும் வகையில் நவீனமான, தரமான, அதே சமயத்தில் மலிவான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருவது தனது நோக்கமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெருமைக்காக புதிய தேசிய காரை தயாரிப்பதை விடுத்து மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுங்கள் என நஜிப் அறிவுறுத்தியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker