Latestமலேசியா

அன்வாரை அம்னோ தலைவராக்க வேண்டும் – ஜமால் யுனோஸ்

சுங்கை பெசார், ஜூன்.13- அம்னோவின் தலைவர் பதவிக்கு பி.கே.ஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் பெயரை முன்மொழிந்து  அம்னோ சுங்கை பெசார் தொகுதித் தலைவர் ஜமால் யுனோஸ் காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

வரும் ஜூன் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள அம்னோ கட்சித் தேர்தலுக்காக ஜமால் இந்த காணொளியை பதிவு செய்து வாட்ஸெப்பில் பகிர்ந்திருக்கிறார். ஒரு நிமிடம் 44 வினாடிகள் நீளம் கொண்ட அந்த காணொளியில், ஒரு பெரிய சிவப்பு நிற பதாகை முன் ஜமால் பேசி இருந்தார். அந்த பதாகையில், “நான் ஜமால் முகமட் யூனோஸ். அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்” என எழுதப்பட்டிருந்தது.

அதோடு, அம்னோவின் முக்கியப் பதவிகளுக்கு தான் முன்மொழியும் தலைவர்களின் படங்களும் அந்த பதாகையில் இடம்பெற்றிருந்தது. தலைவர் பதவிக்கு அன்வார் இப்ராஹிம்மையும், துணைத் தலைவர் பதவிக்கு ஸாஹிட் ஹமிடியையும் அவர் முன்மொழிந்திருக்கிறார்.

மாறாக, உதவித் தலைவர் பதவிக்கு ஹிஷாமுடினையும், கைரி ஜமாலுடினையும் ஜமால் முன்மொழிந்துள்ளார்.

இளைஞர் அணிக்கு தனது பெயரை மட்டுமே முன்மொழிந்துள்ள ஜமால், “இறைவன் ஆசியால் நான் வெற்றி பெற்றால் இளைஞர் அணியை மறுசீரமைத்து அவ்வணியை எல்லோரும் மதிக்கும்படிச் செய்வேன்” என்று சொல்லிருக்கிறார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker