Latestமலேசியா

அரசியல்வாதிகள் மீதும் பாயுமா சட்டம்?

கோலாலம்பூர், ஜூன்.13- நாட்டுக்கு கடுமையான இழப்பை ஏற்படுத்த உதவும் அரசு ஊழியர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குத் தொடுக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படுவதை வெளிப்படைத் தன்மையை ஆதரிக்கும் மலேசிய அமைப்பான டிரான்ஸ்பெரன்ஸி இண்டர்நேஷனல் வரவேற்றுள்ளது.

அரசு அதிகாரிகளின் எஜமானர்களாக இருந்து , அந்த இழப்பிற்கு காரணமான அரசியல்வாதிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று அந்த அமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

“அந்த முடிவை ஆதரித்த அரசியல்வாதிகள் உட்பட அனைத்து தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்” என்று அந்த அமைப்பின் தலைவர் அக்பார் சத்தார் கேட்டுக் கொண்டார்.

அரசாங்க இலாகாக்கள் மற்றும் ஏஜென்சிகளின் கவனக்குறைவால், நாட்டிற்கும், அரசாங்கத்திற்கும் நஷ்டம் ஏற்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்டுள்ள ஏஜென்சி மற்றும் துறையைச் சேர்ந்தவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தனி சட்டம் பிறப்பிக்கப் பட வேண்டும் என்று ஜி.ஐ.ஏ.சி.சி என்ற ஆளுமை, நேர்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு மையத்தின் பரிந்துரையை தாங்கள் வரவேற்பதாக அக்பார் தெரிவித்தார்.

“அந்தச் சட்டம், ஊழல் குற்றச் செயல்களில் ஈடுபடும் பொதுத் துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உதவும். ஆனால், அந்தச் சட்டமானது, பொதுத் துறை ஊழியர்கள் மீது மட்டும் பாயக் கூடாது. அவர்களை ஊக்குவிக்கும் அரசியல்வாதிகளின் மீதும் அந்தச் சட்டம் பாய வேண்டும். ஏனெனில் இந்த அரசியல்வாதிகள் அரசு ஊழியர்களை பகடைகளாக பயன்படுத்துகிறனர்” என்று அவர் அறிவுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker