Latestசினிமா

இந்திய சினிமா: வெறும் அங்க அசைவே பிரதானமா? -சர்ச்சையில் பிரியங்கா!

லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூன்.13- அண்மைய காலமாக பிரயங்கா சோப்ரா அடிக்கடி வம்பில் சிக்கி வருகிறார். ஆங்கிலப் படத்தில் மேலாடையின்றி  படுக்கை அறை காட்சியில் நடித்ததாக பரபரப்பு எழுந்தது.

தற்போது நடித்து வரும் ஹாலிவுட் சீரியலில் இந்தியர்களின் மத உணர்வை புண்படுத்தும் படியான கதாபாத்திரத்தில் நடித்ததாக புகார் கூறப்பட்டது. இது சர்ச்சையாக வெடித்தது பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் மத உணர்வை புண்படுத்தும் படியாக காட்சி அமைந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார். ஒரு சர்ச்சை முடிந்தது எனும் எண்ணிய நிலையில் தற்போது புதிய சர்ச்சை உருவாக்கி இருக்கிறார்.

அண்மையில் அமெரிக்காவில் நடந்த எம்மி விருது விழாவுக்கு சென்ற பிரியங்கா சோப்ரா, அங்கு சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்றார். அவரிடம் இந்திய  சினிமா பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரியங்கா சோப்ரா, இந்திய சினிமாவில் அங்க அசைவு தான் பிரதானம். அதைத்தான் ரசிகர்கள் விரும்புகின்றனர். எல்லா நடன காட்சிகளும் அப்படியே தான் அமைக்கப்படுகின்றன என்று பேட்டி அளித்தார்.

தனது பேட்டியில் எவ்வாறு நடன அசைவு அமைக்கப் படுகிறது. என்பதை விளக்கும் வகையில் அங்க அசைவுகளுடன் ஆடிக் காட்டினார். அந்த வீடியோ இணையத் தளத்தில் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. பிரியங்காவின் இந்தப் பேட்டி திரைப்படத் துறையினருக்கு அதிர்ச்சி அளித்திருப்பதுடன் ரசிகர்கள் அவரது கருத்துரையை விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker