Latestமலேசியா

‘ஐஜிபி பதவி பறிக்கப்படுமா? உண்மையல்ல!’ –மொகிடின்

கோலாலம்பூர், ஜூன்.13- தேசிய போலீஸ் படையில் அதிரடி மாற்றங்கள் நிகழப் போகிறது. போலீஸ் படைத் தலைவரின் வேலை பறி போகவிருக்கிறது என்ற தகவல்கள் பரவலாகி இருக்கும் வேளையில், அந்தத் தகவல்களில் உண்மையில்லை என்று உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிடின் யாசின் தெரிவித்தார்.

“போலீஸ் படையில், அடுத்த மாதத்தில் பல்வேறான மாற்றங்கள் நிகழ்த்தப்படும் என்று வெளியாகியுள்ள தகவலை நான் மறுக்கிறேன்” என்று மொகிடின் கூறினார்.

இருந்த போதிலும், போலீஸ் படையின் முக்கிய அணிகளில் மற்றும் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படக் கூடும் என்ற தகவலை அவர் மறுக்கவில்லை.

“சிறப்பான ஆட்சியை வழங்க வேண்டும் என்ற பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் கொள்கை அடிப்படையில், இந்த மாற்றங்களின் அவசியம் குறித்து நான் ஆராயவிருக்கின்றேன். அதன் பின்னர், என் முடிவினை நான் பிரதமரிடம் தெரிவிப்பேன்” என்று அவர் சொன்னார்.

“அரசாங்கத்தின் அனைத்து அமைச்சுகள், ஏஜென்சிகள் மற்றும் இலாகாக்கள், நேர்மையாகும் பொறுப்புணர்ச்சியுடனும் நடந்துக் கொள்ளும் என்ற உத்தரவாதத்தை நான் இங்கு தருகிறேன்” என்று அவர் அறிக்கை ஒன்றின் வாயிலாக தெரிவித்துக் கொண்டார்.

தேசிய போலீஸ் படையின் தலைவரின் பதவி, மற்றும் அப்படையின் முக்கியப் பதவிகளை வகிக்கும் தலைவர்களின் பதவிகள் எதிர்வரும் ஜூலை மாதம் பறிபோகும் என்று சிங்கப்பூர் ஸ்ட்ரேய்ட் டைம்ஸ் நாளிதழ் அண்மையில் தகவல் வெளியிட்டது.

நாட்டின் தேசிய போலீஸ் படைத் தலைவராக கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் தான் டான்ஶ்ரீ முகமட் ஃபூஸி ஹரூண் நியமிக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker