Latestஉலகம்

கனடாவில் 3 வயது மகனை காரோட்ட செய்த தாய் கைது!

டுர்ஹாம், ஜூன்.13- தனது மூன்று வயது மகனை மடியில் அமர்த்திஸ்டேரிங்பிடிக்க வைத்து காரோட்ட அனுமதித்து, அதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட தாய் கைது செய்யப்பட்டார்.

கனடாவைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் தனது மூன்று வயது மகனை மடியில் அமர்த்தி காரின் ஸ்டேரிங்கை இயக்க அனுமதித்துள்ளார்.

கடந்த மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் பல சாலைக்  குற்றச்செயல் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத் தளங்களில் பதிவிடப்பட்டுள்ளதாக டுர்ஹாம் பகுதி போலீசாருக்கு தகவல் வந்தது.

அந்த வீடியோக்களில் ஒரு கார் நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் செல்வதும் முக்கியமாக ஒரு பெண் ஒரு குழந்தையை மடியில் அமரச் செய்து அவனிடம் ஸ்டேரிங்கை கொடுத்திருந்ததும் அவர்கள் இருவருமே சீட் பெல்ட் அணியாததும் தெளிவாகத் தெரிந்தது.

அந்தப் பெண் தனது செல்போனில் இந்தச் சம்பவத்தை படம் பிடித்திருந்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர்.இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு சிறார்களுக்கு உதவும் அமைப்புக்கு தகவல் கொடுத்துள்ளனது.

தற்போது அந்தப் பெண் கைது செய்யப்பட்டு அவர் மீது   9 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு பின்னர்  அவரை நீதிமன்றத்தில் முன் நிலைபடுத்த போலீசார் உத்தரவிட்டுள்ளனர்

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker