Latestமலேசியா

சாப்பிடு கண்ணா சாப்பிடு- கொஞ்சம் நேரத்தோடு சாப்பிடு!

கோலாலம்பூர், ஜூன்.13- இரவு உணவை தாமதமாக எடுத்துக் கொள்ளும் போது அது பல்வேறு நோய்களை அனுமதிப்பதற்கான காரணகர்த்தாவாகி விடுகிறது.
நாம் அனைவருக்கும் இரவு நேர உணவுப்பழக்கம் என்பது ஒரு தலைவலியாகவே அமைந்துள்ளது.

இரவு உணவை தாமதமாக உட்கொண்டால் உடலில் பல்வேறு பிரச்சினைகள் உண்டாகும். இரவு நேர உணவால் பல நோய்களுக்கு ஆளான நபர்கள், இரவு உணவில் அதிக கபோஹைட்ரேட், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் உட்கொள்வார்கள்.

மேலும் இவர்கள் இரவு உணவை உண்ட பின்னரும் மேலும் அதிகமாக உணவு உண்பார்கள். இதன் காரணமாக இவர்களால் பகல் வேளைகளில் உணவை மிகக் குறைவாகவும் இரவு வேளையில் மிக அதிகமாகவும் தான் உட்கொள்ள முடியும்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களால் நிம்மதியாக தூங்க முடியாது. ஏனெனின்  தூக்கத்தில் உணவை பற்றிய சிந்தனை அவர்களை ஆட்கொள்ளும்.

இதனால் இவர்கள் வெறுப்புடனும்- குற்ற உணர்ச்சியுடனுமே காணப்படுவார்கள் அதற்கு காரணம் அவர்கள் உணவு உட்கொள்ளும் போதே அடுத்த வேளை உணவைப்பற்றி சிந்திக்க தொடங்கி அதைப் பற்றி பயப்படுவது தான் காரணமாகும்.

இதுவும் ஒரு  வகை நோய் தான். இப்படி பாதிக்கப்பட்டவர்கள் பிற உணவு சம்பந்தப்பட்ட தாக்கம், தூக்க கோளாறுகள் மற்றும் மனச் சோர்வு   போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் வாய்ப்புகள் அதிகம்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சியானது பசியை ஒடுக்கி நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.

இரவு நீண்ட நேரம் விழித்திருக்கும் பழக்கம் கொண்டவர்கள் உங்களுடைய இரவு உணவை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மாற்றி அமைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

இரவு உணவை 8 மணிக்கு முன்னதாகவே உட்கொள்ள வேண்டும். இரவில் வேலை செய்பவர்களுக்கு இதெல்லாம் சாத்தியமில்லை தான். இருப்பினும் சாத்தியத்தை சாப்பாடு தொடர்பான விஷயத்தில் சத்தியமாக்கிக் கொள்ள வேண்டுமென ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker