Latestமலேசியா

சாலை வசதி இல்லாததால் சடலத்தை தோளில் சுமந்து சென்ற அவலம்

ரானாவ், ஜூன்.13 – இங்குள்ள கிராமம் ஒன்றில் இறந்து போன பெண்ணின் சடலத்தை வீட்டிற்கு தோளில் சுமந்து சென்ற அவலம் நடந்துள்ளது.

ஜிலிமியா டிஜி என்ற 52 வயது  பெண் புற்றுநோய் காரணமாக  கோத்தா கினாபாலுவில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்ததால்,  உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாமல் அவரது குடும்பத்தினர் தவித்தனர்.

சாதாரணமாகவே கோத்தா கினபாலுவில் இருந்து  ஜிலிமியா டிஜியின் கம்போங் பெனுலாங்கோனுக்கு நடந்து செல்ல 90 நிமிடங்கள் பிடிக்குமாம். அப்படியானால், ஜிலிமியாவின் உடலை அவரது குடும்பத்தார் எவ்வாறு  வீட்டுக்கு கொண்டு சென்று இருப்பார்கள்?

ஜிலிமியா குடும்பத்தைப் பார்த்து பரிதாபப்பட்ட கிராமத்து மக்கள் தோள் கொடுத்தனர். ஜிலிமியாவின் உடலை சவப்பெட்டிக்குள் வைத்து அதன் இரண்டு பக்கத்திலும் மூங்கிலைக் கட்டி னர். 20 ஆண்கள் கூடி ஆள் மாற்றி ஆள் அந்த சவப்பெட்டியை தோளில் சுமந்து சென்றனர்.

குண்டும் குழியுமாக உள்ள சாலை வழியாகவும், ஆற்றின் குறுக்கே உள்ள மரப்பாலத்தை எல்லாம் சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம்  சடலத்துடன் கடந்து செல்வது எளிதான காரியமா? ஜிலிமியாவின் உடலை வீட்டில் சேர்க்க அவர்களுக்கு மூன்று மணி நேரம் பிடித்ததாம்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker