Latestமலேசியா

சிவாவுக்கு பிரிட்டன் அரசியாரின் இளம் தலைவர் விருது

கோலாலம்பூர், ஜூன்.13- காமன்வெல்த் நாடுகளில் உள்ள மக்களின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவந்த இளையர்களை அங்கீகரிக்க வழங்கப்படுகின்ற விருதுதான் பிரிட்டன் அரசியாரின் இளம் தலைவர் விருது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிரிட்டன் அரசியாரின் இளம் தலைவர் விருதை பெறுவோர் பட்டியலில் சிலாங்கூர், ரவாங்கைச் சேர்ந்த சிவா நாகப்பன் விஷ்வேஸ்வரனும் இடம்பெற்றுள்ளார். அவருடன் மற்றொரு மலேசியரான வென் ஷின் சியா என்ற இளம் பெண்ணும் அவ்விருதை பெறவிருக்கிறார். அவரும் சிலாங்கூரைச் சேர்ந்தவரே.

வரும் ஜூன் 26-ஆம் தேதி, பக்கிங்ஹம் அரண்மனையில் நடைபெறவிருக்கும் விருது விழாவில், இரண்டாம் எலிசபத் அரசியாரிடமிருந்து அவர்கள் அந்த விருதைப் பெற்றுக்கொளளருக்கிறார்கள்.

20 வயது சிவா மலேசியாவில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை சமாளிக்க புதிய தீர்வைக் காண்பதற்கான திட்டங்களை மேம்படுத்தி வருகிறார். மாறாக, 26 வயது வென் தூய்மைக்கேட்டுப் பிரச்சனைகளைக் களையும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.

53 காமன்வெல்த் நாடுகளில் இருந்து 240 இளைஞர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எலிசபத் அரசியாரிடமிருந்து விருதினை பெறவிருப்பதை நினைத்தால் பெருமையாக இருப்பதாக சிவாவும் வெனும் தெரிவித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker