Latestமலேசியா

டிரம்புக்கு இப்படியொரு மலேசிய ரசிகரா?

சிங்கப்பூர், ஜூன்.13- அமெரிக்க அதிபர் டிரம்ப் – வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளாகியுள்ள நிலையில், அமெரிக்க அதிபரை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் மலேசிய இளைஞர் மகாராஜ் மோகன் 765 சிங்கப்பூர் டாலர் செலவழித்து ஷங்ரி-லா தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்த செய்தியும் வெளியாகியுள்ளது.

25 வயது மகாராஜ் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தீவிர ரசிகராம். இதனால், கிம்மைச் சந்திக்க டிரம்ப் சிங்கப்பூர் வருவதைத் தெரிந்துகொண்ட மகாராஜ், டிரம்பைப் பார்த்து ஒரு செல்பி எடுக்க வேண்டும் என நினைத்து சிங்கப்பூர் சென்றிருக்கிறார். இதற்காக செண்டோசா தீவில் உள்ள ஷங்ரி-லா தங்கும் விடுதியில் ஓர் இரவு தங்குவதற்கு மட்டுமே 765 சிங்கப்பூர் டாலர் அதாவது கிட்டத்தட்ட ஈராயிரம் ரிங்கிட்டை செலவழித்திருக்கிறார்.

அங்கு,  டிரம்ப் – கிம் சந்திப்பு நடைபெற்ற பகுதிகளில் பல மணி நேரமாக மகாராஜ்  காத்திருந்தாராம். ஆனால், அவரால் டிரம்ப் அருகில் நெருங்கவே முடியவில்லையாம். எனினும் அங்கிருந்து டிரம்பின்  ‘THE BEAST’  கார் அருகே நின்று செல்பி எடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாராம் மகாராஜ்.


இது குறித்து பேசிய மகாராஜ், “டிரம்புடன் செல்பி எடுப்பது கடினம் என அனைவரும் கூறினார்கள். ஆனால், சில நேரத்தில் நாம் எதிர்பாராததும் நடக்கும் என்ற அற்ப நம்பிக்கையில்தான் இந்த முயற்சியில் இறங்கினேன். டிரம்பைப் பார்க்க ஈராயிரம் ரிங்கிட் செலவழித்தது ஒரு பெரிய விஷயமே கிடையாது” எனக் கூறியுள்ளார்

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker