Latestஉலகம்

தாய் கண் எதிரே சிறுவனை கடித்துக் கொன்ற சிறுத்தை!

ஹாரினாகாரி, ஜூன்.13- உத்திரகாண்டில் சிறுவன் ஒருவனை சிறுத்தை ஒன்று கொன்றதை அடுத்து கிராம மக்கள், காட்டிற்குத்    தீ வைத்தனர்.

உத்திரகாண்ட மாநிலம் ஹாரினாகாரி பகுதியில் காட்டௌ ஒட்டியஓரு கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை, 7வயது சிறுவனைத் தாக்கிக் கொன்று தின்றது.

இரவில் சிறுவன் சிறுநீர் கழிக்க வெளியே சென்ற போது அவனை, அந்தச் சிறுத்தை தாக்கியதாக தெரிகிறது. சிறுவனுடைய அலறல் சத்தம் கேட்டு சமையல் கட்டில் இருந்து அவனது தாயார் ஓடோடி வந்துள்ளார்.

அப்போது காட்டுச் சிறுத்தை ஓன்று  சிறுவனை தாக்கி கடித்துக் குதறுவதைக் கண்டு கூக்குரலிட்டவாறு  அவனுடைய தாயார் காப்பாற்ற எவ்வளவோ போராடினார். கிராம மக்களும் ஓடி வந்து சிறுவனை காப்பாற்ற முயற்சித்தனர்.

ஆனால் அதற்குள் சிறுத்தை சிறுவனை கொன்று விட்டது. இத்துயரச் சம்பவம் அக்கிராம மக்களுக்கு பெரும் வேதனையையும் பீதியையும் கொடுத்தது.

இதனால், ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்த கிராம மக்கள் அப்பகுறியில் உள்ள காட்டிற்கு தீ வைத்து கொளுத்தி உள்ளனர். இதையடுத்து காட்டுப்பகுதி  பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker