Latestமலேசியா

தேசிய முன்னணி, எங்களுக்கு வேண்டாம் என்கிறார் நஸ்ரி

கோலாலம்பூர், ஜூன்.13- தேசிய முன்னணியிலிருந்து அம்னோ வெளியேற்றப்பட வேண்டுமா என்பதை விவாதிக்க.,தே.மு. உறுப்புக் கட்சிகள் கூட்டம் நடத்த வேண்டும் என்ற கெராக்கான் கட்சியின் கருத்துக்கு ‘அப்படியொரு தே.மு. தேவையில்லை, நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்’ என்று டத்தோஶ்ரீ நஸ்ரி பதில் கூறியுள்ளார்.

தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகள், அம்னோவை தே.மு.விலிருந்து வெளியேற்றுவது தொடர்பில் கூடிய விரைவில் கூட்டம் நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்று கெராக்கான் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் ஆண்டி யோங் அண்மையில் கேட்டுக் கொண்டார்.

தேசிய முன்னணி தனது அடையாளத்தை இழந்து விட்டது. ஆதலால், அதனை வழி நடத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ள இதர உறுப்புக் கட்சிகள், அதனை தாராளமாக எடுத்து வழி நடத்தலாம் என்று நஸ்ரி பதில் கூறினார்.

“தீபகற்ப மலேசியாவில் நாங்கள் தனியாகவே செயல்பட விரும்புகிறோம். கெராக்கானும் தனது வலிமையை இழந்துவிட்டது. கெராக்கான் கட்சி விரும்பினால், அவர்கள் தேசிய முன்னணியை ஏற்று வழி நடத்தலாம்” என்று அவர் சொன்னார்.

அம்னோவின் நிலை குறித்து இதர தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகள் என்ன முடிவெடுப்பர் என்ற கேள்விக்கு, தாம் அது குறித்து வருத்தம் கொள்ளவில்லை என்று நஸ்ரி பதிலளித்தார்.

மசீச, மஇகா மற்றும் கெராக்கான் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவையும் தெரிவிக்கவில்லை என்பது கடந்த பொதுத் தேர்தலில் தெரிய வந்துள்ளது. அந்தக் கட்சிகளால் மக்களின் ஆதரவை திரட்ட முடியவில்லை. தேசிய முன்னணி தலைவர்கள் இதை நன்றாக உணர்ந்திருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

அந்தக் கட்சிகள் படுதோல்வி அடைந்தன. அவர்களால் மீண்டும் எழுந்து வர சில காலம் எடுக்கும். அக்கட்சிகளை கொண்டு செயல்படும் தேசிய முன்னணியால், எவ்வாறு வெற்றியை நோக்கி நடைபோட முடியும் என்று நஸ்ரி கேள்வி எழுப்பினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker