Latestமலேசியா

மகாதீரே சொன்னாலும் தவறு தவறுதான் – ராம் கர்ப்பால் சிங்

கோலாலம்பூர், ஜூன் 13 – அரசாங்கம் அமைத்துள்ள சான்றோர்களின் குழு இரண்டு தலைமை நீதிபதிகளை அழைத்து அவர்கள் பதவி விலகவேண்டும் என்று கோரியதை பிரதமர் துன் டாக்டர் மகாதீரே தற்காகாத்துப் பேசினாலும் தவறானது என்று புக்கிட் குளுக்கோர் எம்.பி. ராம் கர்ப்பால் சிங் கருத்துரைத்தார்.

அந்தக் குழுவின் செயல், சட்டத்திற்கு முரணானது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நீதித்துறையில், அரசு நிர்வாகம் தலையிடக்கூடாது என்பது தான் ஜனநாயகத்தின் அடிப்படையான அம்சம் என்று ராம் கர்ப்பால் சிங் சொன்னார்.

சான்றோர் குழுவின் தலைவரான துன் டாய்ம், இரு தலைமை நீதிபதிகளை தனிபட்ட முறையில் அழைத்துப் பேசியது தவறு. அவரை மகாதீரே தற்காத்து பேசினாலும் தவறு, தவறுதான் என்றார் ராம்பால் சிங்.

இந்த சான்றோர் குழுவை அரசாங்கம்தான் அமைத்தது. எனவே, அது எடுக்கும் நடவடிக்கைகள், அரசாங்கத்தின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே கருதப்படும் என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

இந்தக்குழு, நீதிபதிகளை அழைத்து அவர்களை பதவி விலகச் சொல்வது என்பது அரசாங்கம் விடுத்த கோரிக்கையாகவே கருதப்படும். அவ்வாறு நீதித்துறையில் அரசு தலையிட முடியாது. அரசு நிர்வாகமும் நீதித்துறை நிர்வாகமும் வேறுபட்ட அரசாங்களுக்கு உட்பட்டிருப்பதை மதிக்காத செயலாக இது அமைகிறது என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker