Latestமலேசியா

நெகிரியில் சபாநாயகர் ஷுல்கிப்லி! துணை சபாநாயகர் எம். ரவி!

சிரம்பான், ஜூன்.13 – அமானா நெகாரா கட்சி தலைவர் ஷுல்கிப்லி முகமட் ஒமார் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற சபாநாயகராகவும் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் ரவி முனுசாமி துணை சபாநாயகராகவும் அறிவிக்கப்பட்டனர்.

அவர்கள் இருவரும் ஜூலை 2ஆம் தேதி நடக்கவிருக்கும் சிறப்பு மாநிலச் சட்டமன்றம் கூட்டத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள் என நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமினுடின் ஹருண் கூறினார்.

அதோடு, ஷுல்கிப்லி மற்றும் ரவியின் பதவி நியமனம் தொடர்பாக இன்று நடைபெற்ற ஆட்சிக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்தாலோசனைக்குப் பிறகு ஒப்புதல் கிடைக்கப் பெற்றது என்றார் அவர்.

“இந்த இரண்டு பதவிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் நீண்ட காலமாக இருந்தாலும் இன்று தான் நாங்கள் ஆலோசித்து முடிவெடுத்து உள்ளோம்” என விஸ்மா நெகிரியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமினுடின் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker