Latestமலேசியா

மசீசவின் ஒரேயொரு எம்பி; வீ காவின் வெற்றியை எதிர்த்து வழக்கு!

கோலாலம்பூர், ஜூன்.13- ஆயர் ஹித்தாம் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்டு வென்ற மசீசவின் ஒரேயொரு எம்பியான டத்தோஶ்ரீ டாக்டர் வீ கா சியோங்கின் வெற்றியில் தமக்கு சந்தேகம் இருப்பதாக கூறி, அது குறித்து ஜொகூர் மாநில ஜசெக தலைவர் லியூ சின் தோங் தேர்தல் வழக்கு மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

வீ கா சியோங், தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் ஆணையத்தின் மீது, லியூ சின் தோங் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
“லீயின் முடிவை நான் மதிக்கின்றேன். இருந்த போதிலும், எனது வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு, நான் நீதிமன்றத்தில் போராடுவேன்” என்று தனது முகநூல் பக்கத்தில் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 9-ஆம் தேதியன்று, தோல்வியை ஒப்புக் கொண்டு, லியூ தன்னை தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு, வாழ்த்துகள் தெரிவித்தார் என்றும் வீ கூறினார்.

“முன்னணியின் சார்பில் போட்டியிட்ட பல மசீச தலைவர்கள் தோல்வியை தழுவியதால், எனது வெற்றியை என்னால் முழு மனதாக ஏற்றுக் கொண்டு, சந்தோஷம் கொள்ள முடியவில்லை என்று நான் லியூவிடம் கூறினேன்” என்று அவர் விளக்கினார்.

லியூவின் மனுவிற்கு, நீதிமன்றம் என்ன பதிலளிக்கவுள்ளது என்பதை தாமும் தனது வழக்கறிஞரும் எதிர்பார்த்து காத்திருப்பதாக வீ சொன்னார்.

வீ கா சியோங்கின் தேர்தல் வெற்றியை எதிர்த்து, லியூ தனது வழக்கறிஞர் டத்தோ இயோ யாங் போவின் உதவியோடு, ஜொகூர் பாரு உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு மனுவை சமர்ப்பித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker