Latestமலேசியா

மலேசியா, பல வெற்றிகளை குவிக்க முடியும்! –மகாதீர்

கோலாலம்பூர், ஜூன்.13- உலக அரங்கில் மேலும் பல வெற்றிகளை மலேசியா குவிக்கும் என்ற நம்பிக்கை தனக்குள் எழுந்திருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்கொள்ளும் பல இன்னல்கள் குறித்து, ஜப்பான் நாட்டு பிரதமர் கவனமாக செவிமடுத்ததாகவும், அந்த இன்னல்களைச் சரி செய்துக் கொள்ள மலேசியாவிற்கு அவர் தேவையான கால அவகாசத்தை வழங்கி உள்ளதாகவும், மகாதீர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறினார்.

“நாடு எதிர்நோக்கியுள்ள சிரமங்களை களைய, தன்னால் இயன்ற உதவிகளை வழங்கவும் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே முன்வந்தார்” என்று பிரதமர் தகவல் தெரிவித்தார்.

நாட்டின் ஏழாவது பிரதமராக பதவியேற்ற மகாதீர், அண்மையில் ஜப்பான் நாட்டிற்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டார். அவர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker