Latestஇந்தியா

“மலேசிய பெண் 2ஆவது மனைவியா? விடமாட்டேன்”- விஜய் டிவி நவின் மனைவி!

சென்னை, ஜூன்.13- கோடி ரூபாய் கொடுத்தாலும் ‘மிமிக்ரி’ கலைஞர் நவீனை விவாகாரத்து செய்ய முடியாது. பேரும் புகழும் வந்ததும் மலேசிய பெண்ணை இரண்டாவது மனைவியாக்க முயற்சிக்கும் நவினை தான் அவ்வளவு எளிதில் விடப் போவதில்லை என முதல் மனைவி திவ்யலட்சுமி அறிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “கலக்கப் போவது யார்” மூலம் பிரபலமான நவீன், தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக திவ்யலட்சுமி என்ற அவரது மனைவி போலீசில் புகார் செய்தார்.

அதாவது கடந்த 2016-இல் நவீனும் தானும் திருமணம் செய்து கொண்டதாகவும் பின்னர் பேரும் புகழும் கிடைத்த பின்னர் மலேசியாவைச் சேர்ந்த பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். ஆனால் திவ்யலட்சுமியை தான் திருமணம் செய்யவில்லை என நவீன் கூறியிருந்தார்.

இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவிருந்த தருவாயில் மணமேடையில் நவின் கைது செய்யப்பட்டௌ போலீசாரால் விசாரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே திவ்யலட்சுமிடம் நவீனை விவாகாரத்து செய்ய பேரம் பேசப்பட்டதாக அவர் கூறினார்.. இது குறித்து தற்போது கூறிய திவ்யலட்சுமி இரண்டாவது திருமணத்துக்காக என்னிடம் பேரம் பேசுகின்றனர். கோடி ரூபாய் கொடுத்தாலும் அவருக்கு விவகாரத்து வழங்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker