Latestமலேசியா

முன்கூட்டியே பணி ஓய்வு பெறுகிறார் தேர்தல் ஆணையத் தலைவர்

புத்ராஜெயா, ஜூன்.13-  தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் ஹஷிம் அப்துல்லா வரும் ஜூலை முதலாம் தேதி பணி ஓய்வு பெறவுள்ளார்.
அவருடைய சேவைக் காலம் முடிவதற்கு முன்னரே அவர் பணி ஓய்வில் செல்லவிருக்கிறார்.

அவர் முன்கூட்டியே பணி ஓய்வு பெறுவதற்கு ஜூன் ஏழாம் தேதியே மாமன்னர் ஒப்புதல் வழங்கிவிட்டார் எனவும், இது குறித்து நேற்று முன்தினம் பிரதமர் துன் மகாதீரிடமும் அறிவிக்கப்பட்டுவிட்டதாகவும் தேர்தல் ஆணையத் தரப்பு தெரிவித்துள்ளது.

2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி, முகமட் ஹஷிம் துணைத் தலைவராக தேர்தல் ஆணையத்தில் சேர்ந்தார். அதன் பின்னர், 2016-ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆம் நாளில் அவ்வாணையத்தின் தலைவராக பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker