Latestஉலகம்

மேகன் மார்க்கலை போலவே மாற முயன்ற இளம்பெண்!

லண்டன், ஜூன் 13- மேகன் மார்க்கலை போன்று மூக்கும் அவரின் சிரிப்பும் தனக்கு அப்படியே இருக்க வேண்டும் என விரும்பிய இளம்பெண் ஒருவர் கணவரின் எச்சரிக்கையையும் மீறி பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.

பக்கிங்ஹாம்ஸையர் கவுண்டியை சேர்ந்தவர் டிரேசி கிஸ் (வயது 30) இவருக்கு கணவரும் இரு குழந்தைகளும் உள்ளனர். இளவரசர் ஹார்ரியின் மனைவி மேகன் மார்க்கலின் தீவிர ரசிகரான டிரேசி, அவரின் மூக்கு மற்றும் சிரிப்பு தனக்கு அப்படியே இருக்க வேண்டும் என விரும்பினார்.

அதன்படி பிளாஸ்டிக் சர்ஜரி  மூலம் தனது மூக்கை மாற்றி கொண்டுள்ளார். மேலும் மார்க்கல் போலவே தனது சிரிப்பு இருக்க வேண்டும் என பற்களையும் மாற்றி கொண்டுள்ளார். இதற்காக டிரேசி இதுவரை 10,000 பவுண்ட் செலவு செய்துள்ளார்.

டிரேசி தனது மூக்கை இவ்வளவு செலவு செய்து மாற்ற முயன்றது அவருடைய கணவருக்கு  பிடிக்காத நிலையில் இது குறித்து அவருடன் சண்டை போட்டுள்ளார். ஆனால் கணவர் வெறுப்பையும் மீறி டிரேசி இவ்விஷயத்தை மகிழ்ச்சியுடன் செய்துள்ளார்.

டிரேசி கூறுகையில், ‘மார்க்கல் திருமண நிகழ்வின் போது நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தேன். அதனால் தொலைக்காட்சி மூலம் அவரது திருமணத்தைப் பார்த்தேன். தற்போது மார்க்கல் போலவே மூக்கும் சிரிப்பும் கொஞ்சம் எனக்கு வந்துள்ளதாக நம்புகிறேன். இதற்கான சிகிச்சையை தொடர்ந்து மேற்கொண்டு வருவேன்என கூறியுள்ளார் டிரேசி.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker