Latestமலேசியா

ரிம.1 டிரில்லியன் கடனா? அது சுத்தப் பொய்! – நஜிப்

கோலாலம்பூர், ஜூன்.13- தே.மு அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்திருந்தது போன்றே, தர மதிப்பீட்டு நிறுவனம் மூடி’ஸ் கணிப்பும், நாட்டின் கடன் விகிதம் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் இருந்து 50.8 விழுக்காடு மட்டுமே என்று நிலை நிறுத்தியுள்ளது.  அப்படி என்றால், பக்காத்தான் அரசு, நாட்டின் மொத்தக்  கடன் 1 டிரில்லியன் ரிங்கிட் அதாவது உள்நாட்டு மொத்த உற்பத்தியில் இருந்து 80.3 விழுக்காடு என கூறி இருப்பது பொய்தானே என்று முன்னாள் பிரதமர் நஜிப் கேள்வி எழுப்பியுள்ளார்.

“என் தலைமைத்துவத்தின் கீழ் செயல்பட்ட அரசு, அனைத்துலக தரத்தைப் பின்பற்றிதான் எதையும் செய்து வந்தது. நிதி நிர்வகிப்பில் நாங்கள் வெளிப்படையான போக்கைத்தான் கடைப்பிடித்து வந்தோம். ஏனெனில், ஒவ்வொரு அது பொருளாதாரத்தில் எப்பேற்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எங்களுக்குத் தெரியும்.”

“80.3 விழுக்காட்டு கடனை பக்காத்தான் அரசு மிகைப்படுத்தி பேசுகிறதே, மகாதீர் பிரதமராக இருந்தபோது 80-ஆம் ஆண்டுகளின் விளிம்பில், நாட்டின் கடன் 103.4 விழுக்காடாக பதிவாகியிருந்தது. அதோடு ஒப்பிடுகையில் 80.3 விழுக்காடு பரவாயில்லையே. அப்போது மட்டும் திவாலாகாத நாடு இப்போது எப்படி திவாலாகிவிட்டதாக சொல்கிறார் மகாதீர்?” என நஜிப் கேள்விக் கணைகளை அள்ளி வீசி இருக்கிறார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker