Latestமலேசியா

ஷாஹிடான் காசிமிற்கு பக்கவாதம்!

கங்கார், ஜூன்.13 – பெர்லீஸ் மாநில அம்னோ தலைவரும் முன்னாள் மந்திரி புசாருமான டத்தோஶ்ரீ ஷாஹிடான் காசிமிற்கு பக்கவாதம் ஏற்பட்டது என மாநில அம்னோ செயலாளர் டத்தோ சாஹிடி சைனுல் அபிடின் உறுதிபடுத்தினார்.

“அவர் படுத்த படுக்கையாக இல்லை. ஆனால் பக்கவாதம் அவரது உடல் அசைவுகளை பாதித்ததால் அவர் முழுமையாக ஓய்வு எடுத்து வருகிறார்,” என சாஹிடி கூறினார்.

1995-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை பெர்லிஸ் மந்திரி புசாராக பதவி வகித்த ஷாஹிடான் நடந்து முடிந்த 14-ஆவது பொதுத்தேர்தல் வரை பிரதமர் அலுவலகத்தில் அமைச்சராகப் பணியாற்றினார்.

டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிம், தனது சகோதரரும் தம்புன் துலான் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ இஸ்மாயில் காசிமை பெர்லிஸ் மந்திரி புசார் வேட்பாளராக அறிவித்ததைத் தொடர்ந்து நடைபெறவிருந்த பெர்லிஸ் மந்திரி புசாரின் பதவியேற்பு விழா ஒதுக்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து, பெர்லிஸ் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்லான் மானின் பதவியேற்பு விழாவிற்கு ஷாஹிடானும் தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்கள் வருகைத் தராமல் அவ்விழாவை புறக்கணித்து சர்ச்சையை ஏற்படுத்தினர். அவர்களின் அச்செயல் பெர்லிஸ் மன்னர் துவாங்கு சைட் ஸிராஜூடினின் கோபத்தை தூண்டியது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker