Latestமலேசியா

1எம்டிபி : ஜோ லோவுடன் துபாயில் பேச்சுவார்த்தையா?

கோலாலம்பூர், ஜூன்.13- 1எம்டிபி நிதி முறைகேடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய பேர்வழிகளில் ஒருவரான தொழிலதிபர் ஜோ லோ, 1எம்டிபி விசாரணைக் குழுவினரை துபாயில் சந்திக்கவும், விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக உள்ளதாகவும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், அந்த சந்திப்புக்கு முன்னதாக 1எம்டிபி விசாரணைக் குழுவினர் ஜோ லோவின் வழக்கறிஞர்களுடன் சந்திப்பு நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோ லோ இந்த  1எம்டிபி விசாரணைக்கு எவ்விதத்தில் உதவலாம் என்பது குறித்து விசாரணைக் குழுவினர் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கு தெளிவுப்படுத்துவது அவசியம் என்று கருதுகிறார்களாம்.

கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத் ஆணையம் ஜோ லோவுக்கு எதிராக கைது ஆணையைப் பிறப்பித்திருந்தது.  அதை அடுத்து, இண்டர்போல் அவரை அனைத்துலக குற்றவாளியாகவும் அறிவித்திருந்தது. அதனால், மலேசியாவுடன் கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளும் நடைமுறையில் உடன்பாடு இல்லாத நாடுகளில் ஜோ லோ தலைமறைவாக இருந்து வந்தார். ஆகக் கடைசியாக அவர் ஒருவேளை ஆஸ்திரேலியாவில் அல்லது மக்காவில் இருக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

இதனிடையே, ஜோ லோ  1எம்டிபி விசாரணைக்கு ஒத்துழைப்பதாக ஒப்புதல் அளித்துள்ளார்

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker