Latestமலேசியா

8 பெர்லிஸ் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இறுதியாக பதவி ஏற்றனர்

ஆராவ், ஜூன்.13 – தே.மு-வைச் சேர்ந்த எண்மர் ஆட்சிக் குழு உறுப்பினர்களாக இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இதன் வழி, பொதுத் தேர்தலுக்கு பிறகு பெர்லிஸ் மாநிலத்தில் நீடித்து வந்த அரசியல் நெருக்கடி ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

ஆராவில் உள்ள அரண்மனையில், இந்த பதவி ஏற்புச் சடங்கு நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு ஆட்சிக்குழு உறுப்பினர்களும் பெர்லிஸ் ராஜா துவாங்கு சைட் ஸிராஜூடின், மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்லான் மான் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

“பெர்லிஸில் அரசியல் நெருக்கடி நடந்திருக்கவே கூடாது. அதனால் அனைவரின் நேரமும் விரயமாகி விட்டது. இனிமேல் இது போன்று நடக்காமல் இருக்க இது நமக்கு ஒரு பாடமாக அமையட்டும்,” என பெர்லிஸ் ராஜா பதவியேற்பு விழாவிற்கு பின்னர் கருத்துரைத்தார்.

பெர்லிஸ் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் விபரம் கீழ் வருமாறு:

## அஸ்மாயிஸா அகமட் (சூப்பிங்)
## நுருல் ஹிஷாம் யாக்கோப் (சிம்பாங் எம்பாட்)
## அஸிசான் சுல்சிமான் (சந்தான்)
## ஹமிசான் ஹஸ்ஸான் (காயாங்)
## ரோஸாயினி ராயிஸ் (பெசெரி)
## ரோஸியானா அகமட் (பாவோ)
## சித்தி பெரேனே யாஹ்யா (மாத்தா ஆயேர்)
## தே சாய் அன் (திதி திங்கி)

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker