Latestமலேசியா

அன்வார்–மகாதீர் பிரிந்து விடுவர்: பக்காத்தான் அரசு சரியும் – அம்னோ

கோலாலம்பூர், ஜூன் 14 – பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் தாக்குப் பிடிக்காது. அன்வாரும் துன் மகாதீரும் நிச்சயமாக பிரிந்து விடுவார்கள் என்று அம்னோ ஆருடம் கூறியிருக்கிறது.

அன்வாரோ அல்லது மகாதீரோ இருவரில் ஒருவர் அம்னோவுக்கே மீண்டும் திரும்பி விடுவார்கள். 2023 ஆம் ஆண்டில் இந்த பக்காத்தான் அரசாங்கத்தின் தவணைக்காலம் முடிவடைவதற்கு முன்பே இந்தக் கூட்டணி உடைந்து விடும் என்று அம்னோ இளைஞர் பகுதியைச் சேர்ந்த லொக்மான் நோர் அடாம் ஆருடம் தெரிவித்துள்ளார்.

இப்போதே அன்வாருக்கும் மகாதீருக்கும் இடையே அதிருப்திகளுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி விட்டன. மகாதீருடன் அன்வாரால் ஒரு போதும் இணைந்து செயலாற்றவே முடியாது. இவர்கள் இருவரில் ஒருவர் முதலில் அம்னோவுக்கு திரும்பப் போகிறார்கள் என்று முன்னாள் பி.கே.ஆர் உறுப்பினரான லொக்மான் சொன்னார்.

ஒரு தவணை முடிவதற்குள் இந்த கூட்டணி உடைந்து போய் விடும். இது நீண்ட காலத்திற்கு நீடிக்காது. அன்வாரை சமூக ஊடகங்களில் பக்காத்தான் ஹராப்பான உறுப்பினர்கள் மறைமுகமாக தாக்கி வருவதில் இருந்தே அன்வாருக்கும் மகாதீருக்கும் இடையே மோதல் நிலவுகிறது என்பதைக் காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

நீண்ட காலத்திற்கு மகாதீர் பிரதமராக நீடித்தால் அவர் அதிர்ஷ்டக்காரர் என்று அர்த்தம். எம்.பி. தேர்தலில் போட்டியிட்டு அன்வார் வென்றால் அடுத்த கணமே அவர் பிரதமராக முயற்சிப்பார் என்று தாம் கருதுவதாக லொக்மான் கூறினார்.

நிதியமைச்சின் முன்னாள் பேச்சாளராக விளங்கிய லொக்மான், ஜூன் மாதம் 30 ஆம் தேதி நடக்கும் அம்னோ தேர்தலில் இளைஞர் பகுதிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ளார் என்று கூறப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker