Latestமலேசியா

அரசுக்கான மருந்து விற்பனையில் ஊழலா? MACC தலையிடுமா?

கோலாலம்பூர், ஜூன்.14- அரசாங்கத்திற்கான மருந்துகள் விற்பனையில் ஊழல்கள் நிகழ்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் வேளையில், அவ்விவகாரம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை செய்ய வேண்டும் என்று மலேசிய மருத்துவ சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

மருந்துகள் விற்பனையில் சில சதிகள் நிகழ்ந்துள்ளது தொடர்பில் தாம் இதற்கு முன்னரே கேள்வியுற்றதாக மலேசிய மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் ரவீந்திரன் கூறினார்.

அரசாங்கத்திற்கு மருந்துகளை விற்பனை செய்யும் முக்கிய மருந்துகள் நிறுவனங்கள், முந்தைய அரசாங்கத்தின் முக்கியத் தலைவர்களின் கீழ் செயல்பட்டுள்ளன.

அந்த முக்கியப் புள்ளிகள், அரசாங்கத்திற்கு விற்பனை செய்யப்படும் பல கோடி ரிங்கிட் மதிப்பிலான மருந்துகளின் விநியோகத்தை தங்களின் ஏகபோகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்பது,12 பக்கங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றின் வாயிலாக தெரியவந்துள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து 2016-ஆம் ஆண்டு வரை, அம்னோ அரசியல்வாதிகள், ஒப்பந்த முகவர்களாக செயல்பட்டு, ரிம.3.7 பில்லியன் மதிப்பிலான உடன்படிக்கைகளை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர் என்று அந்த ஆவணம் விளக்கியுள்ளது.

“இது குறித்து மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் விசாரணை நடத்த வேண்டும். வெளியாகியுள்ள தகவலில் உண்மை இருக்கும் பட்சத்தில், நாட்டின் மருந்துச் செலவுகள் உயர்ந்ததற்கு இது காரணமாக இருந்த்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை” என்று அவர் கருத்து தெரிவித்தார்.

இதனிடையில், வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் மருத்துவ சோதனைகள், அதிகாரப்பூர்வ இரகசிய சட்டத்தின் கீழ் நடத்தப்படுவதாகவும், அந்தச் சலுகை ஒப்பந்தங்கள் குறித்தும் விசாரணை செய்யப் பட வேண்டும் என்று டாக்டர் ரவீந்திரன் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker