Latestஇந்தியா

எஸ்வி.சேகரை கைது செய்யாதது ஏன்? ஸ்டாலின் ஆவேசம்

சென்னை, ஜூன்,14- நடிகர் எஸ்.வி. சேகர், அரசு தலைமை செயலாளரின் உறவினர் என்பதால் தான் அவரை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவாக பேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகரும் பா.ஜ.க பிரமுகருமான எஸ்வி சேகரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது

ஆனால், எஸ்வி.சேகர் இதுவரை கைது செய்யப்படவில்லை. எந்தவொரு பதற்றமும் இன்றி அவர் பொது இடங்களில் ‘ஜாலி’யாக வலம் வருகிறார். போலீசாரே எஸ்வி.சேகருக்கு பாதுகாப்பு கொடுக்கின்றனர்.

இந்நிலையில் இது பற்றி இன்றைய சட்டமன்றக் கூட்டத்தில் பேச திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் ஸ்டானின் கூறுகையில், எஸ்வி.சேகரை கைது செய்ய அனுமதி இருந்தும் இந்த அரசு அவரை கைது செய்யத் தயங்குகிறது. அவர் தலைமைச் செயலாளரின் உறவினர் என்பதால் போலீஸ் பாதுகாப்புடனே வெளியில் சென்று வருகிறார்.

இதைப்பற்றி சட்டமன்ற கூட்டத்தில் பேசிய போது சபாநாயகர் எங்களைப் பேச விடாமல் தடுத்து நிறுத்தினர். இதைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம் எனக் கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker