Latestஉலகம்

ஒரே குடும்பத்தில் 14 ஆண் பிள்ளைகளா?

மெக்சிக்கோ சிட்டி, ஜூன்.14- மெக்சிக்கோவைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு மொத்தம் 14 ஆண் குழந்தைகள், எங்கள் குடும்பத்தைப் பற்றி ஆன் லைன் மூலம் கருத்து தெரிவிப்பவர்கள் என்ன மாதிரியான கருத்துக்களை தெரிவித்தாலும் எங்களுக்கு எவ்வித வருத்தமும் இல்லை என அந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

14 பையன்களுடன் நாங்கள் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதால் மற்றவர்களின் விமர்சனம் குறித்து கவலை எதுவும் இல்லை எனக் கூறுகின்றனர்.

பையன்களின் தந்தை ஒரு வழக்கறிஞர். மேலும் நில அளவியல் வர்த்தகமும் செய்கிறார். மூத்த மகனுக்கு 25 வயதாகிறது கடந்த ஏப்ரல் மாதம் “ஸ்வான்ட்” என்ற புதிதாக பிறந்த இன்னொரு ஆண் குழந்தை இந்த உலகிற்கு வந்துள்ளான்.

எதிர்காலத்தில் 15 ஆவது குழந்தையும் வரலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இவர்களது முதலாவது பேரக்குழந்தை மிக விரைவில் வரவிருப்பதாக கூறப்படுகிறது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker