Latestஉலகம்

கனடா பிரதமருக்கு சரியான பாடம் கற்பிப்பேன் -டிரம்ப்

வாஷிங்டன், ஜூன்.14- ஜி-7 அணி நாடுகளின் உச்சநிலை மாநாட்டின் முடிவில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உரையாற்றியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘கனடா பிரதமருக்கு சரியான பாடம் கற்பிப்பேன்’ என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளது உலக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏழு நாடுகள் இணைந்து நடத்தும் ஜி-7 மாநாட்டின் எட்டாவது நாடாக ரஷ்யாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் கேட்டுக் கொண்டதற்கு இதர நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

முக்கியமாக கனடா ரஷ்யாவை சேர்ப்பதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்தது. அது மட்டுமின்றி வரிவிதிப்பு விவகாரங்களிலும் கனடா மீது அமெரிக்கா அதிபர் டிரம்ப் கோபமாக இருந்தார்.

இந்நிலையில், ஜி-7 மாநாட்டின் முடிவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உரையாற்றும் போது நம்மை யாரும் மோசமாக நடத்துவதை அனுமதிக்க முடியாது என்று கூறினார். இத்தனையும் சேர்ந்து அமெரிக்கா அதிபர் டிரம்பின் கோபத்தை அதிகரிக்க அவர் தற்போது கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்.

கனடா பிரதமருக்கு சரியான பாடம் கற்பிப்பேன் என்று கூறியுள்ள டிரம்ப், தன்னை விமர்ச்சித்தது தவறு என்றும், தன்னை விமர்சித்ததன் பலனை கனடா அனுபவிக்கும் என்றும் இதனால் கனடா பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளார்.

கனடாவை கடுமையாக விமர்சிக்கும் அதே நேரத்தில், டிரம்ப் அமெரிக்காவின் நீண்ட நாள் எதிரியான வடகொரியா அதிபர் கிம்மை புகழ்ந்து தள்ளுவது ஏன் என கேள்வியை மேற்கத்திய நாடுகள் எழுப்பி உள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker