Latestமலேசியா

டேவிட் கெமரூனை அன்வார் சந்தித்தார்!

கோலாலம்பூர், ஜூன்.14- பிகேஆர் கட்சி ஆலோசகர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனுடன் கைகுலுக்கும் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.

மலேசிய சிறைச்சாலைகளில், கைதிகள் நடத்தப்படும் முறை மற்றும் அவர்களுக்கான சிகிச்சை முறை குறித்து, டேவிட் கெமரூன் பல முறை மலேசிய அதிகாரிகளிடம் கலந்தாலோசித்தது தொடர்பில், அன்வார் தனது நன்றியை தனது டுவீட்டின் வாயிலாக தெரிவித்துக் கொண்டார்.

அந்தச் சந்திப்பின் போது, மாற்றங்களை எவ்வாறு சிறப்பாக செயல்படுத்துவது என்பது தொடர்பில், கெமரூனின் கருத்துகளை தாம் கூர்ந்து கவனித்ததாகவும் அன்வார் கூறினார்.

“அதுமட்டுமல்லாது, 1எம்டிபி விவகாரம் தொடர்பிலான விசாரணைக்கு, அனைத்துலக ரீதியில் உதவியைப் பெற்று, மலேசியர்களுக்கு சொந்தமான சொத்துகளை அவர்களிடத்தில் திருப்பித் தருவது தொடர்பிலும் நாங்கள் கருத்துகளை பரிமாறிக் கொண்டோம்” என்று அவர் சொன்னார்.

கடந்த மாதம் சிறைச்சாலையிலிருந்து விடுதலை ஆகிய முன்னாள் துணைப் பிரதமரான அன்வார் இப்ராஹிம், ஐக்கிய கண்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வொன்றில் கலந்துக் கொள்வதற்காக அங்கு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அந்த நிகழ்வில், பிரபல வழக்கறிஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் முன்னிலையில், ‘மலேசியாவில் சட்டங்கள் எவ்வாறு மீறப்படுகின்றன’ என்பது குறித்து அவர் பேசினார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker